பாடசாலைகளை அண்மித்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளில் புலனாய்வுப் பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சிவில் உடைகளில் நடமாடும் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பாடசாலை மட்டத்தில் கடமையில் ஈடுபடுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரஜா பொலிஸ் குழுக்களினூடாக பாடசாலைகளை அண்மித்து செயற்படும் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாடசாலைகளை தவிர தனியார் வகுப்புகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம் - நியூஸ்பெஸ்ட்