அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (13) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் அடையாள வேலைநிறுத்த போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
சம்மேளனத்தின் தலைவர் ஷியாம் பன்னஹக்க கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக அனேமாக புத்திஜீவிகள் நாட்டை விட்டு வௌியேறும் நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் அண்மையில் நிறைவேற்றிய வரி திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ழவிரிவுரையாளர் சங்க சம்மேளனம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது. அத்துடன் இலங்கை பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் பகல் 12 மணி தொடக்கம் 1 மணி வரை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் வரி செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நாம் கூறவில்லை. இந்த வரிக்கொள்கைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இவ்வரிக்கொள்கையினால் நாட்டில் நிபுணர்கள், கற்றவர்கள், புத்திஜீவிகள் என அனைவரும் நாட்டை விட்டு வௌியேற முயல்வார்கள்.
புத்திஜீவிகளின் வௌியேற்றத்தால் நாட்டின் எதிர்காலம், குறிப்பாக பல்கலைக்கழக சட்டமூலம் என்பன பாதிக்கப்படும் போன்ற காரணங்களை நாம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகிறோம். அதற்கு யாரும் செவிமடுக்காத காரணத்தினால்தான் நாம் இன்று எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம் என்று தெரிவித்தார்.