நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து நேற்று (21) பாடசாலைக்கு வருகை தந்தமை தொடர்பான புகைப்படங்கள் சமூவளைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
பெரும்பாலான ஆசிரியர்கள் தமது புகைப்படங்களை இலகு ஆடைகள் அணிந்தாவாறு சமூகவலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சேலை அணிவதற்கு அதிக செலவாவதன் காரணமாக வேறு உடைகள் அணிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும், ஆசிரியைகளின் உடையான சேலையை மாற்றுவது தொடர்பில் தாம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கபோவதில்லையென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அண்மையில் நாடாளுமன்ற தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.