அரச நிறுவனங்களில் விடுமுறை விண்ணப்பங்களை இணையவழி (Online) முறைமையின் ஊடாக நிரப்புவதற்கு தயார் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அச்சிடும் செலவைக் குறைக்க இந்த இணையவழி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு ஏற்கனவே இது தொடர்பாக முன்னோடி திட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் எதிர்காலத்தில் அரச அலுவலகங்களிலும் இந்த முறை திட்டமிடப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மூலம் - டெக்மோர்