பரீட்சைக்கான திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது

பரீட்சைக்கான திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது

கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாதென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீ்ட்சை எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதியும் க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலத்தில் நடத்துவதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திப்போடுமாறு அந்த பரீட்சைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவையாக தோற்றும் மாணவர்களினால் பெருமளவு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அத்துடன் அதற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளும் கருத்துக்களை முன்வைத்தனர் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசியுங்கள் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கல் குறித்து அரசாங்கத்துக்கு யோசனை

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் மீண்டும் ஒரு முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அதற்காக தம்மை தயார்படுத்துவதற்கு மூன்று மாத காலங்களே இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அனைத்துக் காரணங்களையும் கருத்திற்கொண்டு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள திகதிகளில் பரீட்சைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் பரீட்சைகளை மீண்டும் ஒத்திப்போடுமாறு எந்தத் தரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image