ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, பகுதி 2 வினாப்பத்திரத்தை முதலில் வழங்குவதற்கும், முதலாம் பகுதி வினாப்பத்திரத்தை இரண்டாவதாக வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2022 ஆம் ஆண்டிலிருந்து நேர அட்டவணையை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான கடந்த வருடங்களின் நேர அட்டவணை தொடர்பாக நன்கு ஆராய்ந்தன் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையின்போது காலை 9.30 முதல் 10.45 வரையான காலப்பகுதியில் இரண்டாம் பகுதி வினாப்பத்திரம் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும், முதலாம் பகுதி முற்பகல் 11.15 முதல் மதியம் 12.15 வரை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.