அரச ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் கையொப்பம்!
அரச உத்தியோகத்தர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கையானது தற்போது மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
"வாழ்க்கை செலவை தாங்கிக்கொள்ள முடியாது, பணவீக்க கொடுப்பனவை வழங்க வேண்டும், போக்குவரத்து கொடுப்பனவை வழங்க வேண்டும், பொருட்களின் விலை, எரிபொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு தடையான சுற்றறிக்கையை நீக்கவேண்டும"
முதலான கோரிக்கைகளை முன்வைத்து அரசசேவை ஒன்றிணைந்த மகஜரில் கையொப்பம் கையொப்பமிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும் செய்திகள் அரச ஊழியர்கள் ஓய்வுபெறுதல் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்தின் அறிவிப்பு
அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பான அறிவித்தல்
இந்த நடவடிக்கையானது கேகாலை மாவட்ட செயலாளர் காரியத்திலும், ஹல்துமுல்லை பிரதேச செய்லக காரியத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.