அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்தம் செய்தல்
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளவாறு, அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது 60 ஆக திருத்தப்பட வேண்டியுள்ளது.
அதற்கமைய, 2023.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதற்கான ஒழுங்குவிதிகளை விதித்து ஏற்புடைய சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தெசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னதாக அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 65 ஆக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.