அரச ஊழியர்களின் ஓய்வு வயதெல்லை குறைப்பு: அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு
அரசாங்க ஊழியர்களில் ஓய்வுபெறும் வயதெல்லையை திருத்தம் செய்துள்ள அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவை காரியாலயத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சரவையில் அதுதொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
65 வயதாகவிருந்த அரசாங்க ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தவிர்ந்த ஏனைய 50 வயது நிறைவடைந்த அரசாங்க ஊழியர்கள் இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி ஓய்வுபெற முடியும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் அரச உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் தொடர்பில் வௌியான விசேட அறிவித்தல்
19ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிப்பு
தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை
அதுதொடர்பான சுற்றுநிருபம் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சினால் வெ ளியிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சு ஓய்வுபெறும் வயதெல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதியில் சுமார் 20,000 அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மூலம் - தினகரன்