அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் புதிய அறிவித்தல்

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் புதிய அறிவித்தல்

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான புதிய அறிவித்தல் ஒன்றை பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பில், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னேவினால் நேற்று (01) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் வாசியுங்கள் ஆசிரியர் சேவை இணைப்பு பிரச்சினைக்கு தீர்வு

கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதிய அரச நிர்வாக அமைச்சின் 02ஃ2022 சுற்றறிக்கையின் பிரகாரம், அனைத்து அரச ஊழியர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்படுவதற்கு முன்னர், சேவை அவசியத்தன்மை அடிப்படையில், சில விசேட சேவைகளுக்கு கட்டாய ஓய்வு வயதெல்லை, ஓய்வூதிய யாப்பில் நிர்ணயிக்கப்பட்ட, கட்டாய ஓய்வு வயதெல்லை 60 வயதை விடயும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

 

புதிய இடைக்கால பாதீட்டில், அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60 ஆக திருத்தப்பட்டமையானது, அனைத்து அரச ஊழியர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை, 65 ஆக நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னர், கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு பொருந்தாதவாறு நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதியுடன் சுற்றறிக்கை அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image