மலையகத் தமிழர் தொடர்பான விசேட உரையரங்கு இன்று - நீங்களும் இணையலாம்
"உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும், மலையகத் தமிழர் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்"
என்ற தலைப்பில் மலையக அரசியல் அரங்கத்தின் மாதாந்த உரையரங்கு இன்று இடம்பெறவுள்ளது.
இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தமது பேஸ்புக் பக்கத்தில் வௌியிட்டு்ளள பதிவில்.
ஐ.நா விஷேட அறிக்கையாளர் டொமாயோ ஒபகாட்டோ தனது அறிக்கையிலே மலையகத்தமிழர் சமூகம் அடிமைகளாக நடாத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கை அடுத்த மாதம் (செப்டெம்பர்) நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழவின் மாநாட்டுக்காகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலகளாவிய ஒடுக்கப்பட்ட சமூகங்களின் எழுச்சிகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு மலையகத் தமிழர் சமூகம் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.
அத்தகைய சர்வதேச அனுபவங்களை கொண்ட சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் சதீஷ் கிருஷ்ணபிள்ளை, மலையக அரசியல் அரங்கத்தின் ஆகஸ்ட் மாத உரையரங்கில்,
"உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும்
மலையகத் தமிழர் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்"
எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.
இது அனைவருக்குமான அழைப்பு. யாவரும் இணையலாம்.
தமிழ் - ஆங்கிலம்- சிங்களம் என மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்றவராக, ஆய்வுத் தேடல் உள்ளவராகத் திகழும் நண்பர் சதீஷ் கிருஷ்ணப்பிள்ளையின் உரை யுடன் உரையாடலும் இடம்பெறும்.
Topic: MPA 10
Time: Aug 26, 2022 07:00 PM Colombo
Join Zoom Meeting
Meeting ID: 870 6283 6012
Passcode: mpa10