தற்காலிக இறக்குமதி தடை குறித்து வௌியான விளக்கம்!

தற்காலிக இறக்குமதி தடை குறித்து வௌியான விளக்கம்!

பல வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தடையானது உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பொருந்தாது என இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களை இறக்குமதி செய்து இடம்பெறும் ஏற்றுமதி தயாரிப்புக்களுக்கு தடைவிதிக்கப்படவில்லை என அந்த சம்மேளனனத்தின் உப தவிசாளர் துமிந்த ஹூலங்கமுவ  தெரிவித்துள்ளார்.

எனினும், தயாரிப்பு பணிகளுக்கு என்ற போர்வையில் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்ய அனுமதி இல்லை என்று இலங்கை வர்த்தக சம்மேளனனத்தின் உப தவிசாளர் தெரிவித்துள்ளார். கையிருப்பில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஒதுக்கத்தில், அத்தியாவசிய பொருட்களுக்கா? அல்லது அத்தியாவசியமற்ற பொருட்களுக்கா? முன்னுரிமை அளிப்பது என தீர்மானிக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்படுகிறது.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு மாற்றுவழி இல்லை. ஆகக் குறைந்தது 3 மாதங்களுக்கேனும் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.  சில வர்த்தகர்கள் கூட வர்த்தமானியை முறையாக பார்க்கவில்லை. உண்மையிலேயே, உற்பத்திகளுக்காக இற்க்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு, இது தாக்கம் செலுத்தாது.

அதேநேரம், மூலப்பொருட்களாக இறக்குமதி செய்து உற்பத்திகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதாயின் அதற்கு தடையில்லை. ஆனால், இறக்குமதி செய்து உள்ளுரில் அதனை மீளவும் விற்பனை செய்வதற்கு தடை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், கையிருப்பு கிடைக்கப்பெற்றதும் 2 அல்லது 3 மாதங்களில் இந்த தடையை நீக்குவதாகவும், அதுவரை சற்று பொறுமையாக இருக்குமாறு ஜனாதிபதி கூறியதாக இலங்கை வர்த்தக சம்மேளனனத்தின் உப தவிசாளர் துமிந்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image