ரயில் கட்டண உயர்வை அமுலாக்காத ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ரயில் கட்டண உயர்வை அமுலாக்காத ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ரயில் பயண கட்டண உயர்வு இன்று முதல் அமுலாகின்ற நிலையில், அதற்கு புறம்பாக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில பிரச்சினைகள் காரணமாக, தொடருந்து கட்டண திருத்தத்தை அமுலாக்க முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடருந்து கட்டண அதிகரிப்பை, எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அமுலாக்க தயார் என அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, இன்றைய தினம் முதல் குறித்த காலப்பகுதி வரையில், பழைய கட்டணத்தின் அடிப்படையில், ரயில்  பயணச் சீட்டுக்களை விநியோகிக்குமாறு தமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். <

இந்த நிலையில், ரயில் கட்டண உயர்வு முறைமைக்கு புறம்பாக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image