தொழிற்சங்கங்கள் - வெகுஜன அமைப்புகளின் கூட்டணி சஜித்துடன் சந்திப்பு
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு, இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (23) மதியம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று உள்ளனர். தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கவாதிகளும் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை இராணுவத்தினரை கொண்டு அடக்குமுறை மூலம் அங்கிருந்து வெளியேற்ற முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துப்பதுடன், இந்த அடக்குமுறைக்கு எதிராக செயற்படும் நோக்கில் பரந்த கூட்டணியை உருவாக்குவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த விடயத்தில் நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்து கலந்துரையாடி அரசாங்கத்தின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு எதிராக செயல்படுவதற்காக பரந்த கூட்டணியை அமைத்து உடனடி செயற்பாடுகளுக்கு செல்லும் நோக்கில் தொழிற்சங்கங்களில் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்துள்ளது.