தனியார் பஸ்களுக்கு எரிபொருள் கிரமமான முறையில் கிடைத்தால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேவையான அளவு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (15) இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று 2 எரிபொருள் தாங்கிய கப்பல்கள் நாட்டிற்கு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நாளையதினம் அதனை தரையிறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
முறையான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுமானால் மாத்திரம், குறிப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பயணிகளுக்கு ஏற்றவகையில், எங்களால் சீரான போக்குவர்த்து வசதியை வழங்க முடியும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட அறிக்கை
ராளுமன்றில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறையை அறிவீர்களா?