அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களை வௌ்ளிக்கிழமைகளில் மூட தீர்மானம்
அரச ஊழியர்களை வௌ்ளிக்கிழமைகளில் கடமைக்கு அழைக்கும் விடயம் தொடர்பில் அமைச்சரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்காது, அதற்கு பதிலாக விவசாயம் செய்தல் அல்லது வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட ஏனைய இடங்களில் பயிரிடும் மாற்று வழியை செய்து கொடுப்பதற்கான யோசனைக்கு நேற்று (13) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு சேவை, கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மூடுமாறும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது/
அரச ஊழியர்கள் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கு செல்வது தொடர்பான புதிய அறிவித்தல்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சத்தியக் கடதாசிகள், லீவு அறிக்கைகள் தொடர்பாக