மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் எவருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை - ஜனாதிபதி

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் எவருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை - ஜனாதிபதி
மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்தை கையளிப்பது தொடர்பில் தாம் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அழுத்தங்களை விடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைவர் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் தெரிவித்த கருத்தை தாம் வன்மையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் கொள்கையானது ஒவ்வொரு செயற்திட்டத்தையும் மிகவும் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் உரிய முறைமையிலும் வழங்குவதாகும்.
 
இலங்கைக்கு மின்சக்தி அத்தியாவசியமாக உள்ள இச்சந்தர்ப்பத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறை தொடர்பில் பாரியளவிலான திட்டங்களுக்கு கிடைக்கும் கேள்வி குறைவாக உள்ளதால், அவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டாலும், செயற்திட்டங்களுக்காக நிறுவனங்களைத் தெரிவு செய்யும்போது அரச கொள்கைகளுக்கேற்ப வெளிப்படையான செயல்முறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 

COPE என்றழைக்கப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் இலங்கை மின்சார சபை கடந்த 10ஆம் திகதி ஆஜராகிய போது, மின்னுற்பத்தி செயற்றிட்டத்திற்காக இந்தியாவின் அதானி நிறுவனத்தை தெரிவு செய்த விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி தன்னை அழைத்து இந்த செயற்றிட்டத்தை அதானி நிறுவனத்திடம் வழங்குமாறு தெரிவித்ததாக COPE குழுவில் ஆஜராகிய இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்டினான்டோ குறிப்பிட்டுள்ளார்.

பாரத பிரதமர் மோடி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் விடுத்ததாகவும் அவர் விசாரணையின் போது கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், காற்றாலை திட்டம் தொடர்பான மின்சார சபை தலைவரின் கூற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image