அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சத்தியக் கடதாசிகள், லீவு அறிக்கைகள் தொடர்பாக
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சத்தியக் கடதாசிகள் மற்றும் லீவு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிறுவன நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கடிதங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசிகள் மற்றும் லீவு அறிக்கைகளை பரிசீலனை செய்யும்போது அந்த ஆவணங்களில் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் சத்தியக் கடதாசிகள் மற்றும் லீவு அறிக்கைகளை அனுப்பும்போது இணைப்பு 01 மற்றும் 02 இல் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிப்படிவங்களின்படி அனுப்பி வைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நாட்களை குறைப்பது குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு
ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாடசாலைக்கு பகுதி பகுதியாக அழைக்க யோசனை
நாளை குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படும்