தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீள்வதற்கு இணைந்து உதவுவது தொடர்பில், அமெரிக்காவும், சீனாவும் அவதானம் செலுத்தியுள்ளன.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும். சீன தூதுவர் ஸி சென்யொங்கிங்கிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (13) கொழும்பிலுள்ள சீன தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதர்ப்பு முன்னுரிமைகள் குறித்தும் இதன்போது நட்புறவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.