ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை!

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை!
வாழ்க்கைச் செலவு அதிகம் உள்ள நிலையில், மாதாந்த உதவித் தொகையான ரூ.5000  பற்றாக்குறையாக உள்ளமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்கவினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
இக்கடிதத்தில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
01. இதுவரை ரூ.5000/- ஆகவுள்ள கொடுப்பனவினை குறைந்தபட்சம் ரூ. 10,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.
 
02. ஆசிரியர்களுக்கான தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான கட்டணம் குறுகிய காலத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதையும் அதற்கேற்ப தற்போது வழங்கப்படும் 5,000 ரூபாய் என்ற சொற்ப கொடுப்பனவின் மூலம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் நாங்கள் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. அரசாங்கம் வழங்கும் இச்சிறிய கொடுப்பனவு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை.
 
 03. அத்துடன் 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கல்வி கற்கும் 12,000ஆசிரிய மாணவர்கள் எதிர்நோக்கும் கடுமையான நிதிப் பிரச்சனைகளுக்கு தொடர்பாகவும் தீர்வுகாணவும், கல்விப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் சார்பாக வேண்டுகோள் விடுப்பதாகவும் இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் செய்திகள்
 
 
 
 
IMG-20220529-WA0019.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image