அரச ஊழியர்களின் சம்பளம் - கொடுப்பனவை குறைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு!
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை குறைக்கும் நடவடிக்கைக்கு எதிராக அணிதிரளுமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோத்தர் மத்திய நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதாயின் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கவேண்டியேற்படும் என்று பொதுநிர்வாக, உள்விவகார மாகாணசபைகள மற்றம் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலளார் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்திருந்தார்.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச ஊழியர்களை அழைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்டவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு!
பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ் ருவன்சந்ரவினால் கடந்த 13ஆம் திகதி அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு இந்த விடயம் தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுநிர்வாக, உள்விவகார மாகாணசபைகள மற்றம் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலளார் ஜே. ஜே. ரத்னசிறி குறித்த கருத்தை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்னை இட்டுள்ள ஒன்ணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை குறைப்பதற்கு அரசாங்கம் தயாராகிறது!
ஒன்றிணைவோம் - தலையிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.