காலிமுகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவாக மரத்தில் ஏறி போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஹட்டன் டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் சுமார் 100அடி உயர மரத்தில் ஏறி நபர் ஒருவர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
#GOHOMEGOTA என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகை மற்றும் காலி முகத்திடலில் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கேகாலை ரம்புக்கனை பகுதியில் தூப்பாக்கிசூட்டில் உயிரிழந்த நபருக்கு நீதி வேணடும் என கோரியுமே இந்த நபர் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்ட்ரி கீழ் பிரிவு தோட்டத்தில் 45வயதுடைய நபரே இவ்வாறு நூறு அடி உயரம் கொண்ட மரத்தின் மீது எறி இலங்கை தேசிய கொடியை பிடித்தவாறு, எதிர்ப்பு பதாதைகளை குறித்த மரத்தில் காட்சிப்படுத்தியவாறு இன்று காலை போராட்டத்தை முன்னெடுத்தார்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இன்று மதியம் அவர் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.