தேசிய எதிர்ப்பு தினத்தன்று ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்? ஜோசப் ஸ்டாலின் விளக்கம்
தேசிய எதிர்ப்பு தினமான நாளைய தினம் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வௌியிட்டுள்ளார்.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் வௌியிட்டுள்ள பதிவில்,
''ஏப்ரல் 20 தேசிய எதிர்ப்பு தினம்''
ஏப்ரல்20, ஒடுக்குமுறை அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு நாளாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளால் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வேலைக்குச் செல்லும்போது, கருப்பு உடை அணிந்து, கருப்பு பட்டி அணிந்து பணிபுரியுமாறும் தெரிவிக்கிறோம்.
அதேபோன்று ஏனையசேவைகளின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து, உங்கள் பகுதியில் எதிர்ப்புநடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், பாடசாலைமற்றும் கல்விஅலுவலகம் முன் கருப்புக் கொடி ஏற்றி, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
இது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, போராட்ட நாளை வெற்றிகரமாக நடத்த செயற்படுவோம்.