எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (19) பல பகுதிகளில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை என பஸ் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 17 ஆம் திகதி லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்தது.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நேற்று நள்ளிரவு (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
நேற்று நள்ளிரவு (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
இதற்கமைய, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 338 ரூபாவாகும்.
ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 373 ரூபாவாகும்.
லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 289 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 329 ரூபாவாகும்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று முன்தினம் (17) மீண்டும் அதிகரித்தது. அனைத்து வகையான பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 35 ரூபாவினாலும், டீசல் லீட்டர் ஒன்றின் விலையினை 75 ரூபாவினாலும் அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 338 ரூபாவாவவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 367 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 289 ரூபாவாகவும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 327 ரூபாவுக்கும், பிரிமியம் 295 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.