அரச-தனியார் துறை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

அரச-தனியார் துறை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

அரச-தனியார் மற்றும் பகுதிநிலை அரச துறைசார் ஊழியர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலையானது சாதாரண மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தற்போது வீதிக்கு இறங்கி அரசாங்கத்திடம் தீர்வு கேட்கின்றனர். இந்த நிலைமை தொடர்பில், தொழிலாளர் வர்க்கமான, அரச - தனியார் சேவை, பகுதிநிலை அரச சேவை, பெருந்தோட்டத்துறை உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்க மத்திய நிலையம் இன்று கொழும்பில் கூடி ஆராய்ந்து கூடியது.

தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமை தொடர்பில் மிகவும் ஆழமாக இதன்போது கலந்துரையாடப்பட்டு, நாட்டில் வேலை செய்யும் தரப்பினர் என்ற அடிப்படையில் இந்த போராட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டு செல்வதற்கு அதேபோன்று இந்த போராட்டத்தின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளுக்கு கோரிக்கைகளை வெற்றி கொள்வதற்காகவும் இந்த நாட்டின் வேலை செய்யும் தொழிலாளர் வர்க்கத்தினர் என்ற அடிப்படையில் செய்யக்கூடிய நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானமானது, நாளைய தினம் (ஏப்ரல் 08) வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அரசு துறை, தனியார்துறை பகுதிநிலை அரசசேவை என அனைத்துத் துறை சார்ந்தவர்களும் ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளைய தினம் இந்த நாட்டின் அரச மற்றும் தனியார்துறை சார்ந்த 80 லட்சம் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் இந்த நடவடிக்கையுடன் தொடர்புபடும் வகையில் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம், வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இதற்கமைய 8ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது

இந்த சந்தர்ப்பத்தில் நான், அரச சேவை மற்றும் மாகாண சேவையின் எம் என் நான்கு சம்பளத்திற்கு உரித்தான அனைத்து பட்டதாரி உத்தியோகத்தர்களிடமும் இந்த ஒரு நாள் பணி வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தம் அல்ல. ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாகும். தொடர்ந்து இந்த வேலைநிறுத்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது ஆட்சியாளர்களின் தீர்மானத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

2022இல் தரம் ஒன்று மாணவர்களுக்கு வகுப்புகளை ஆரம்பிக்கும் காலம் அறிவிப்பு

அரச சேவையை தடையின்றி முன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image