ஊரடங்கு நீக்கம்: பொதுப் போக்குவரத்து நிலையை அறிந்துக்கொள்ளுங்கள்
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது/
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
அதேநேரம், 15 சதவீத தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையில் தனியார் பஸ்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து அமைச்சரும், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரும் தமக்கு அறியப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இலங்கை போக்குவரத்து சபைகு சொந்தமான பஸ்களும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா
மின் துண்டிப்பை 2 மணித்தியாலம் குறைக்க வேண்டும்: PUCSL 5 பரிந்துரைகள்