ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லை பிரச்சினைக்கு தீர்வு என்ன? கல்வி அமைச்சின் நிலைப்பாடு இதோ
ஆசிரியர் ஆட்சேர்ப்பில் வயதெல்லை பிரச்சினை தொடர்பில், கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் மத்திய குழுவின் சார்பில் ஞானானந்த தேரர் நேற்று (30) கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வயதெல்லை தொடர்பான பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை வழங்கியிருந்தனர். ஆறு மாதங்களுக்கு முன்னர் அமைச்சருடனும், அமைச்சரவை உப குழுவுடனும் அரசாங்கத்தின் தொழிற்சங்கங்களும், அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களும் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த செயற்பட்டிருந்தனர்.
கடந்த காலங்களில் ஆசிரியர் தேர்வு தொடர்பான வேலைத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களுக்கே சந்தர்ப்பம் வழங்கினர். அந்த சங்கங்களுடன் கலந்துரையாடியே இந்த தீர்மானம் எடுத்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார். எனவே இந்த விடயத்தில் பட்டதாரிகள் சார்பில் முன்னிலையான அரசாங்கத்தின் தரப்பினரேஇந்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக தலையீடு செய்தனர் என்பது இன்று மிகத் தெளிவாக தெரிய வந்தது.
அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த, ஜனக்க பண்டார தென்னகோன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதாக அவர்கள் எங்களிடம் கூறினார்கள். ஆனால் 35 என்ற வயதெல்லையை கடந்தவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்க முடியாது என்ற விடயத்தை அவர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் ஏற்படுத்தி இருக்கின்றார்கள் என்பது இன்று தெரியவந்தது.
எனவே இந்த விடயத்தில் நாங்கள் எமது பக்கத்தில் சார்பில் முன்வைத்த விடயமானது வயதெல்லையை அதிகரித்தல் என்பதாகும். தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இந்த வயதெல்லையை 45 ஆக அதிகரித்திருந்தனர் என்ற விடயத்தை சுட்டிக்காட்டினோம்.
இந்த வயதில்லை பிரச்சினை இருக்கும் சந்தர்ப்பத்தில் பாடசாலைகளில் கடமையாற்றுகின்றார். எனவே ஏன் எமக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்க முடியாது என்று நாங்கள் கேட்டோம். இந்த வாய்ப்பை வழங்க வேண்டுமாயின் மீண்டும் அமைச்சரவை தீர்மானமோ அல்லது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஏதேனும் ஆலோசனையோ வழங்கப்பட்டால் தங்களுக்கு இந்த விடயத்தில் செயல்பட முடியும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
எனவே, மீண்டும் அமைச்சரவை மூலமாக இதனை தீர்க்க முடியாது. எனவே நாங்கள் மீண்டும் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை உள்ளது . வயதெல்லை பிரச்சினை உள்ள அனைத்து சகோதர சகோதரிகளும், இதற்கு தீர்வு கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்காமல், வீதிக்கு இறங்கி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக மாகாண மட்டத்தில் மாவட்ட மட்டத்தில் தேசிய ரீதியில் வெகுவிரைவில் நாங்கள் தலையீடு செய்வோம். இதற்காக அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கின்றோம் - என்றார்.
மேலும் செய்திகள்