டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலைத் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்ட போதிலும் டீசல் இன்மையால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடைக்கிடையே பல மணி நேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதன் காரணமாக டீசல் இல்லாத நிலையில் அரைக்கும் இயந்திரங்களின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுவதாக தொழிற்சாலை முகாமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவித்தாரணவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி விசேட திட்டத்தின் கீழ் தேயிலை தொழில்துறையினருக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
இது தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நியூஸ்பெஸ்ட்
இ.தொ.காவின் புதிய பதவி நியமனங்கள் தொடர்பான முழு விபரம்
தடுப்பூசி தொடர்பான சுகாதார அமைச்சின் வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு