தொழிலாளர்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய இணையத்தளம் அங்குரார்ப்பணம்
வேலைத்தளங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், தொழில் திணைக்களத்தில் முறையிடுவதற்கான, இணையத்தள சேவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று (16) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
தொழிலாளர்களுக்கு ஏற்படும் அனைத்துவகையான முறைப்பாடுகளையும் தொழில் அமைச்சின் இணையத்தளத்துக்கு சென்று முறையிடும் பகுதியில், இருக்கும் இடத்தில் இருந்தே முறையிடலாம்.
அவ்வாறு முறைப்பாடு செய்யப்படும்போது அவர்களுக்கு அதுதொடர்பாக முறைப்பாடு இலக்கம் ஒன்று குறுந்தகவல் ஊடாக அனுப்பிவைக்கப்படும். அதன் ஊடாக தாங்கள் செய்த முறைபாட்டடின் நிலை தொடர்பாக தொழிலாளர்கள் அறிந்துகொள்ளலாம்.
'நீங்கள் தனியார்துறை அல்லது பகுதியளவான அரசதுறை ஊழியராகவிருந்து ஃ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிநிதியாகவிருந்து தங்களுக்கு தொழில் அல்லது சேவை தொடர்பான பிரச்சினைகள் காணப்படின், அவ்விடயங்களை இங்கே பதிவிடவும்' என அந்த முறைப்பாட்டு பிரிவு தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை வழங்கினால், முறைப்பாடு பற்றிய தகவல்களை நேரத்திற்கு நேரம் பெற்றுக்கொள்ளமுடியும்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த முறைப்பாட்டுத் தளத்தில் தொழிலாளர்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம். முறைப்பாடு பதிவு இணைய விபரம் கீழே உள்ள இணைப்பில்.
தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டுப் பிரிவு
சம்பளம் தொடர்பான முறைப்பாடுகள்.