முறைசார் - முறைசாரா துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்து ப்ரொடெக்ட் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வு
முறைசார் மற்றும் முறைசாரா துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்து ப்ரொடெக்ட் சங்கம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது.
சர்வதேச மகளிர் தினத்திற்கு சமாந்தரமாக ப்ரொடெக்ட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வு கடந்த 13ஆம் திகதி மேல்மாகாண சவுந்தரிய கேந்திரத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ப்ரொடெக்ட் சங்கத்தின் ஹட்டன், லக்ஷபான மற்றும் கொழும்பு முதலான கிளைகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். ப்ரொடெக்ட் சங்கம் முறைசாரா பிரிவு தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தொழிற்சங்கமாகும். எனினும், இந்த மகளிர் தின கொண்டாட்டத்திற்காக முறைசார் தொழில்துறை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் மற்றும் அங்கத்தவர்களுடன் ஒன்றிணைந்தமை விசேட அம்சமாகும்
இம்முறை மகளிர் தின தொனிப்பொருள், 'நிலையான எதிர்கால பாலின சமத்துவத்திற்காக இன்று அணிதிரள்வோம்' மற்றும் 'பக்கச்சார்ப்பு தன்மையை தகர்ப்போம்' முதலான இரண்டு தொனிப்பொருளில் இந்த மகளிர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது சமூகத்தில் பெண்களுக்கு உரிய இடம் மற்றும் அரச சேவையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற தலைப்புகளின் கீழ் தேசிய தொழிற்சங்க முன்னணியின் தேசிய அமைப்பாளர் தமரா தயானி உரையாற்றினார்.
'நிலையான எதிர்கால பாலின சமத்துவத்திற்காக இன்று அணிதிரள்வோம்' என்ற தனிப்பொருளின்கீழ் தேசிய தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவையாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நிலந்தி ரணசிங்க உரையாற்றினார்.
இதற்கு மேலதிகமாக ஆடைத் தொழில்துறையில் சேவையாற்றும் பெண்கள் பொருளாதாரத்தில் வகிக்கும் பங்களிப்பு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ற தலைப்பின் டாபிந்து சமூகத்தின் தேசிய அமைப்பாளர் சமிலா துஷாரி இந்த நிகழ்வில் உரையாற்றினார்.
இந்த மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வானது, இதுபோன்ற கருத்துகளுக்கு மேலதிகமாக சங்கங்களின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடன மற்றும் மேடை நாடகம் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட பிரதான மூன்று உரைகளுக்கு மேலதிகமாக இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களின்போது, ஏனைய அனைத்து துறைகளிலும் ப்ரொடெக்ட் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள வீட்டுப்பணியாளர் பெண்கள் உள்ளிட்ட முறைசாரா தொழில்துறையை சார்ந்த தொழிலாளர்களின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.