ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான புதிய முறையால் பட்டதாரிகளுக்கு பாதிப்பு
ஆசிரியர் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய முறைமைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியஆராயச்சி கருத்து தெரிவிக்கையில்,
இவர்கள் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகள். பல்கலைக்கழகங்களுக்கு சென்று பல்வேறு கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு விசேட பட்டத்தைப் பெற்று தற்போது ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது தற்காலிக நியமனத்தை வழங்கி விட்டு மூன்று ஆண்டுகள் சென்றதன் பின்னர் மீண்டும் ஆசிரியர் போட்டிப் பரீட்சை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது ஒரு புதுமையான பிரச்சினையாகும்.
ஒரே தடவையில் பரீட்சையை வைக்க வேண்டும் அல்லவா? மூன்றாண்டுகள் பாடசாலையில் கற்பித்துவிட்டு மீண்டும் அவர்கள் எவ்வாறு அரசவைக்கு வருவார்கள்? ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தி அடையாவிட்டால் மூன்றாண்டுகள் பாடசாலையில் கற்பித்தவர்கள் மீண்டும் வீட்டுக்கு எவ்வாறு வருவார்கள்? கிராமத்து வருவார்கள்? மற்றவர்களுக்கு எப்படி முகங்கொடுப்பார்கள்? இது விளங்கவில்லையா? எனவே இதுபோன்ற வேலைகளை செய்ய வேண்டாம் என நாங்கள் ஆட்சியாளர்களுக்கு கூறுகின்றோம்.
பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி தீப்பந்தப் போராட்டம்
ஒரேடியாக பயிற்சியை நடத்தி இருக்க வேண்டும். இந்த பட்டதாரிகள் மீண்டும் எவ்வாறு சமூகத்திற்கு கொடுப்பார்கள்? 22,000 பேரை நீங்கள் எடுக்க பார்க்கின்றீர்கள். 60 முதல் 70 ஆயிரம் பேர் இருக்கின்றனர். 22,000 பேர் ஆட்சேர்க்க வேண்டிய அளவிற்கு பரிட்சை நடத்துகின்றனர். அப்படி எனில் அறிவு இருந்தாலும் தகைமை இருந்தாலும் நீங்கள் எடுக்கின்ற அளவுக்கு மாத்திரமே இங்கு தெரிவு இடம்பெறும். ஏனைய பட்டதாரிகள் என்ன செய்வார்கள்? இது மிகவும் பாரிய பிரச்சினையாகும். எனவே இதுபோன்ற வேலையை செய்ய வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுகின்றோம்.
60,000 வெற்றிடங்கள் இருக்கின்றன. இதற்காக அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரேடியாக சந்தர்ப்பத்தை வழங்குங்கள். ஒரேடியாக போட்டி பரீட்சை நடத்துங்கள். பாடசாலைக்கு 3 ஆண்டுகள் சென்று கற்பித்துவிட்டு பின்னர், போட்டிப்பரீட்சை நடத்தி அந்த பரீட்சையில் சித்தி அடையாதவர்கள் மீண்டும் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். சித்தி அடைந்தவர்கள் மீண்டும் நிரந்தர ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்த நிபந்தனையுடன் இந்த பிரச்சினைக்கு எங்களால் இணங்க முடியாது. எனவே பட்டதாரிகளை இவ்வாறு பிரச்சினைக்கு உள்ளாக்க வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்திடம் கோருகின்றோம்.இந்த நடைமுறை தவறானதாகும். இது விஞ்ஞான பூர்வமானது அல்ல. யாப்பு ரீதியானதுமல்ல.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதி என்ன?
எந்த ஆட்சேர்ப்புக்கும் இந்த முறைமை பொருந்தாது. இது தவறானதாகும் எனவே இந்த தவறான முறையை பின்பற்ற வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகின்றோம்.
60,000 வெற்றிடம் இருக்குமாயின் அந்த 60,000 பேருக்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள் மூன்று ஆண்டுகள் சென்றதன் பின்னர் போட்டிப் பரீட்சையை நடத்த வேண்டாம். போட்டிப்பரீட்iயைச இப்போதே நடத்துங்கள். திகதி ஒன்றை அறிவித்து அனைவருக்கும் அதில் விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி அந்தப் போட்டி பரீட்சையில் சித்தியடைபவர்களை ஆசிரியர்களாக ஆட்சேருங்கள். சித்தியடையாதவர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி இருக்கிறது. அதற்கு நாங்கள் இணங்குகின்றோம். - என்றார்.