நியமனம் பெற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி போராட்டம்!

நியமனம் பெற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி போராட்டம்!

நியமனம் பெற்ற பட்டதாரிகளை சேவையில் இணைப்பதில் உள்ள தடைகளை சுட்டிக்காட்டியும் அவற்றை நிவர்த்தி செய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டமொன்று எ்திர்வரும் 21ம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.

அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் மற்றும் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசியரியர் சேவையில் இணைப்பதற்கான வயதெல்லை 35 என்பதை நீக்குதல், தேசிய மற்றும் மாகாணசபைப் பாடசாலைகளில் தற்போது சேவைப்புரியும் ஆசிரியர் சேவையில் இணைய விரும்பும் அனைத்துப் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளல், 2015 -2020 ஆம் ஆண்டு ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற அனைவரையும் ஆசிரியர் சேவையில் இணைத்தல், தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இம்மாதம் 21ம் திகதி காலை 11.00 இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image