ஆசிரியர் - அதிபர் சம்பளத் திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது
ஆசிரியர் - அதிபர் சம்பளத் திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுச் சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று (05) இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் 2022.01.01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.
தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் நிதியமைச்சின் இணக்கப்பாட்டுடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.