பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கல் தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளரின் கருத்து
பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கல் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப்பெரும கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
2012ஆம் ஆண்டின் பின்னர் 51,000 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஒரேடியாக அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இன்று நேற்று நேற்று முன்தினம் முதல் மூன்று தினங்களில் இது நடந்துள்ளது. இதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய பிள்ளைகள், பட்டதாரி சான்றிதழையும் வைத்துக்கொண்டு வீதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். இந்த நிலை இதற்கு சமூகத்தில் இருந்து சாதகமான சமிக்ஞை கிடைத்துள்ளது எனத் தாம் கருதுவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.