பெண் அரச உத்தியோகத்தர்களை சேவைக்கு அழைத்தல் தொடர்பாக

பெண் அரச உத்தியோகத்தர்களை சேவைக்கு அழைத்தல் தொடர்பாக

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட சலுகை இரத்துச் செய்யப்பட்டதனால், அதனை மீள வழங்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து நேற்று நுகேகொடயில் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் செயாலளர் தம்மிக்க முனசிங்க,

அரச சேவை மற்றும் மாகாண சபை அமைச்சின் ஊடாக 2021 டிசம்பர் 30 திகதி 2ஃ2021(எi) என்ற சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னர் அரச சேவைகளை முன்னெடுத்தல் தொhடர்பான 2ஃ2021(எ) என்ற சுற்றுநிரூபம் 2021.10.01 அன்று வெளியிடப்பட்டது. இந்த சுற்றுநிரூபத்தில் உள்ள சில சரத்துக்கள் புதிய சுற்றுநிரூபத்தில் நீக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2,3,4,5,6,8,14 முதலான சரத்துக்கள். இதில் 6ஆம் சரத்தில், ஒரு வயதிற்கும் குறைந்த குழந்தைகளுடைய பாலூட்டும் தாய்மாரகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை சேவைக்கு அழைக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கொவிட் பரவல் நிலைமை இன்னும் நீங்கவில்லை. இவ்வாறான நிலையில், அரச சேவை அமைச்சின் செயலாளர் அரச ஊழியர்களை மீளவும் சேவைக்கு அழைத்துள்ளார். அரச சேவையில் உள்ள பெரும்பாலானோர் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். எனவே, பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது.

இந்த நிலையில், அமைச்சின் செயலாளர் இப்படியொரு தீர்மானத்தை எடுக்க யாரிடம் கருத்துக்களைக் கேட்டார்? அரசாங்க சேவையில் பல தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்த தொழிற்சங்கங்களுடன் அமைச்சின் செயலாளர் கலந்துரையாடல் நடத்தினாரா?

இந்தத் தீரமானத்தை உடனடியாக மாற்றுமாறு நாங்கள் கூறுகின்றோம். அரச சேவையில் குறிப்பாக சுகாதார சேவை, பாடசாலை ஆசிரியர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், கிராம சேவகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் இநத சலுகையைப் பெற்றுக்கொள்ளவேண்டி உள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டுமாயின், க்pரமமான முறையில் செயற்பட சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். எந்தவொரு கலந்துரையாடமின்றி எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் தவறானதாகும். எனவே, இந்த சலுகையை மீள வழங்குமாறு அரசாங்கத்தையும், அமைச்சையும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image