2021 இல் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - மத்திய வங்கி தகவல்

2021 இல் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - மத்திய வங்கி தகவல்

நாடாளவிய ரீதியில் 2020ஆம் ஆண்டை விடவும், 2021 ஆம் ஆண்டில் ஆசிரியர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இந்தத் தகவலை அறியக்கூடியதாக உள்ளது.

இதன்படி, 2020 ஆம் ஆண்டில் 265,394 ஆக காணப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் 264,215 ஆக குறைவடைந்துள்ளது.

இதற்கமைய, 2021இல் ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,179 ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2020 உடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 994 இனால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரச, தனியார். சர்வதேச மற்றும் ஏனைய பாடசாலைகளின் ஆசிரியர்கள் தொடர்பான விபரம கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆயிரத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CBSL_teachers.jpg

பயிலுநர் பட்டதாரிகள் கவனத்திற்கு...

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image