பயிலுநர் பட்டதாரிகள் நியமனம் தொடர்பான புதிய தகவலை தெரிந்துகொள்ளுங்கள்
அரச சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
வழங்கும் விடயத்துடன் தொடர்புடைய புதிய தகவல்களை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மத்திய நிலையத்தின் பிரதான செயலாளர் சந்ததன சூரிய ஆராய்ச்சி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் காணொளி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளதாவது,
மாகாண சபைகள் அமைச்சினால், அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும், விண்ணப்பப்படிவம் ஒன்றை அனுப்பி, தங்களின் கீழ் பயிற்சிபெற்ற பட்டதாரிகள் மாகாண அரச சேவைக்கா? அல்லது (மத்திய) அரசு சேவைக்கா? இணைய விரும்புகின்றனர் என்ற அடிப்படையில் தகவல் கோரல் இடம்பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில்தான், (மத்திய) அரச சேவைக்கான பட்டதாரிகள் மற்றும் மாகாண அரச சேவைக்கான பட்டதாரிகள் என்ற அடிப்படையில் பிரிவுகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதுவரையில் சில மாகாண சபைகளுக்கு, மாகாண சபைகளின் கீழ் பணியாற்ற விரும்பம் தெரிவித்துள்ள பட்டதாரிகளின் பெயர்கள் மற்றும் ஆவணங்கள் அரச சேவைகள் அமைச்சின் மூலமாக மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அண்மைய நாட்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் தகவல் வெளியானதாக சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.