பெயர்ப்பட்டியலில் பிரச்சினையா? பயிலுனர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்
மாகாண பெயர்ப்பட்டியலில் பிரச்சினை உள்ள அனைத்து பயிலுனர் பட்டதாரிகளும் பின்பற்றவேண்டிய முறைமை
தொடர்பான அறிவித்தலை ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பன வெளியிட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் கடந்த 20ஆம் திகதி அரச சேவைகள் அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
இதுவரையில் நீங்கள் கையளித்துள்ள அனைத்து தகவல்களும் அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தொடர்ந்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக மாகாண பெயர் பட்டியலில் பிரச்சினை உள்ள அனைத்து பயிலுனர் பட்டதாரிகளும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறைமையை பின்பற்ற வேண்டும் என ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பன தெரிவித்துள்ளன.
இதன்படி பிரதேச செயலகங்களுக்கு எழுத்து மூலம் அறியப்படுத்துதல் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக தகவல்கள் அரச சேவைகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இல்லாவிட்டால் பிரச்சினைகளை 0112 692 254 என்ற இலக்கத்திற்கு ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பி வையுங்கள்.
இது தொடர்பான பின்னணி தகவலுக்காக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்திற்கு வட்ஸ்அப் மூலம் தகவல்களை அனுப்பி வையுங்கள்.
வட்ஸ்அப் தொடர்பு இலக்கங்கள்
இமல்கா - 0774 566 799
அஷ்ரப் - 0775 155 431 (தமிழ்)