பூஸ்டர் பெற்றபின் தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்யலாமா? சுகாதாரத்துறை அறிவித்தல்
பொதுமக்கள் கொவிட் தடுப்பூசியை லெமினேட் செய்ய வேண்டாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக, பொதுமக்கள் கொவிட் தடுப்பூசி அட்;டையை இயன்றளவு கவனமாக பயன்படுத்த வேண்டும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி அட்டையை தரவு களஞ்சியத்திற்கு உள்வாங்கி, ஞசு கோட் முறைமைக்குள் இணைத்து, சில சந்தர்ப்பங்களில், கைத்தொலைபேசி ஊடாகவோ அல்லது வேறு முறைமையிலோ பயன்படுத்தும் வரையில், அதனைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியமானதாகும்.
எதிர்காலத்தில், மூன்றாம் தடுப்பூசியின் பின்னர், நான்காம் தடுப்பூசியையும் வழங்கவேண்டி ஏற்படலாம்.
அதற்காக தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.