அரச - தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு வழங்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

அரச - தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு வழங்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

 
அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு இடம்பெறாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அனைத்து நிறுவனங்களின் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க, மிகவும் நியாயாமான முறையில் இந்த சம்பள அதிகரிப்பை கோருவதாக தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய நிலைமைக்கு அமைய, இரண்டு மடங்காக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எவ்வாறு வாழ்வது?
 
வரவு-செலவுத் திட்டத்தில் இதற்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடுமுழுவதும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜே.வி.பியின் நிர்வாக செயலாளர் கே.டி. லால்காந்த இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 
 
ஆட்சியாளர்கள் எங்களுடன் பேச்சு நடத்த நடவடிக்கை எடுத்தால் நாங்களும் அதற்கு தயார். பேச்சு நடத்தினாலும், நடத்தாவிட்டாலும் அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறையினருக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image