மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் நொவம்பர் மாதம் 3ம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாளைய தினம் இலங்கை மின்சார சபையின் சகல சேவையாளர்களும் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, பதுளை, திருகோணமலை, குளியாப்பிட்டி, குருநாகல், அநுராதபுரம், கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் கிரிபத்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த போராட்டங்கள் இடம்பெறவுள்ளது.

எல்.என்.ஜி சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இந்த திருட்டு உடன்படிக்கையால் நாடு முழுவதும் உள்ள மக்கள் அல்லல்படுகின்றனர். தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அன்று 11 கட்சிகளின் தலைவர்கள் உறுதியளித்தனர்.

அதன்படி நாளைய தினம் குறித்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image