விடுபட்ட பாடவிதானங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது? கல்வி அமைச்சின் திட்டம் இதோ
தாமதமாகி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கல்வி நிறைவாண்டை உரிய வகையில், நிறைவுறுத்துவதற்கான மாற்று வழிகளை பயன்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, டிசம்பர் மாதம் கல்வியாண்டு நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் அடுத்த தரத்திற்கு தரம் உயர்த்தப்படுவதுடன், கைவிடப்பட்ட பாடவிதானங்களை ஏதேனும் முறையில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அது தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்துடன் கல்வி அமைச்சு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதுடன் மாற்று வழியாக சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடாத்தல், வாரநாட்களில் மேலதிக மணிநேரத்தினை செலவிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மூலம் - சூரியன் செய்திகள்