பணிக்கு செல்லும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால் சட்ட நடவடிக்கை - சரத் வீரசேகர எச்ரிக்கை

பணிக்கு செல்லும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால்  சட்ட நடவடிக்கை - சரத் வீரசேகர எச்ரிக்கை

பணிப்பகிஷ்கரிப்பை கவனத்திற்கொள்ளாது பணிக்குச் செல்லும் ஆசிரியர்களை அச்சுறுத்துவதற்கு யாராவது முயன்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி - பொல்கொல்ல பகுதியில் நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஆசிரியர்களின் பிரச்சினை நியாயமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை நியாயப்படுத்த முடியாது. ஏனென்றால் இதன்மூலம் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அனைத்து பகுதிகளிலும் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. கிழக்கிலும் கல்வி போதிக்கப்படுகின்றது. சர்வதேச பாடசாலைகளிலும் கல்வி கற்பிக்கப்படுகின்றது. எனினும் தெற்கில் மாத்திரமே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே, ஒருவரின் அல்லது ஒரு சிலரின் தேவைக்காக இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள வேண்டாம் என நான் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். பணிப்பகிஷ்கரிப்பை கவனத்திற்கொள்ளாது பணிக்குச் செல்வோரை அச்சுறுத்துவதற்கு யாராவது முயன்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும். அது ஜனநாயக உரிமையாக இருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக நான் நினைக்கின்றேன். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image