அரசாங்க சேவை ஆணைக்குழு வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு
அரசாங்க சேவை ஆணைக்குழுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதியை இம்மாதம் 15ம் திகதி வரை நீடிக்க அரசாங்க சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நாடளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத்தர பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொதுப்போட்டிப்பரீட்சை - 2021 (இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை கணக்காளர் சேவை மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை) என்பவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதியே நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.