பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சிக் காலம் நீடிப்பு: கொடுப்பனவு தொடர்பிலும் அறிவிப்பு

பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சிக் காலம் நீடிப்பு: கொடுப்பனவு தொடர்பிலும் அறிவிப்பு

பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சிக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு, அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
 
தொழிலற்ற பட்டதாரிகளை தொழிலுக்கு அமர்த்தும் வேலைத்திட்டம் 2020 இன் கீழ் ஆட்சேர்க்கப்பட்டு உங்களின் கீழ்  பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயிலுனர் பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பில் 21/1639/315/03  இலக்கம் மற்றும் 2020.09.03 ஆம் திகதி அமைச்சரவை திருத்தத்துக்கு 2021.09.13ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அரச சேவையில்  பொருத்தமான பதவிகளை கண்டறிந்து அந்த பயிலுனர்களை  தாமதிக்காமல் நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது.
 
அந்த நடவடிக்கைகள் இடம்பெறும் வரையில் அந்த பயிலுனர் பட்டதாரிகளின்  பயிற்சிக் காலத்தை 2021.12.31ஆம் திகதிவரை நீடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
 
இதற்கமைய ஓராண்டு கால பயிற்சியை பூர்த்தி செய்துள்ள பயிலுனர் பட்டதாரிகளை தொடர்ந்தும் டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் தற்போது இருக்கின்ற இடங்களிலேயே பயிற்சியில் ஈடுபடுத்துமாறும்,  அந்தக் காலத்திற்கு அமைவான பயிலுனர் பயிற்சி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறியப்படுத்தப்படுகின்றது.
 
இதற்கு அவசியமான நிதி ஏற்பாடுகளை அமைச்சின் ஊடாக உங்களுக்கு ஒதுக்குவதற்கு உள்ளமையால் அது தொடர்பில் மேலதிக தகவல்களுக்காக அமைச்சின் பிரதான நிதி அதிகாரியை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
ஜே.ஜே.ரத்னசிறி
செயலாளர்
அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு.
 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image