அரச சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அக்ரஹாரா காப்புறுதி யோசனை முறைமையின் நன்மைகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
2016 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது இந்த நன்மைகள் கிடைப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு 70 வயதை அடையும் வரையில் அக்ரஹாரா காப்புறுதியின் நன்மைகள் கிடைக்கப் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது உள்ள நன்மைகளை மேலும் அதிகரித்து அரச சேவையில் ஓய்வுபெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஏற்புடையதாகும் வகையில் அக்ரஹாரா காப்புறுதி யோசனைத் திட்டத்தை நடைமுறைப் படுத்தும் நோக்கில் அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனின் யோசனைக்கு அமைய இது நடைமுறைப் படுத்தப்படுகின்றது.