கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டம்
முழுமையாக தடை செய்யப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுகாதாரம், துறைமுகம், விமான நிலையம் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள், விவசாயத்துறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் முதலீட்டு சபையினால் அனுமதி வழங்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு மாத்திரம், மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி உள்ளதாக அந்த அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து தடைசெய்யப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.