ஆசிரியர், அதிபர் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி நுவரெலியாவில் மாபெரும் பேரணி

ஆசிரியர், அதிபர் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி நுவரெலியாவில் மாபெரும் பேரணி

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த பத்து அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்த அதிபர், ஆசிரியர்கள், அங்கிருந்து வாகன பேரணியாக நுவரெலியா-பதுளை பிரதான வீதி ஊடாக நுவரெலியா நகரை நோக்கி சென்றனர்.

இப் பேரணியில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமுவ ஆகிய கல்வி வலையங்களை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கு உட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் ஒன்றுபட்டு கலந்து கொண்டனர்.

1994 ஆம் ஆண்டுக்கு பின்னராக நாட்டில் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு நிலவி வரும் சம்பள உயர்வு முரண்பாடு, கல்வியை தனியார் மயமாக்கும் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை கிழித்தெறிய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 06 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த பாரிய போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.

Photo_1_3.jpg

Photo_8_1.jpg


Photo_5_1.jpg

Photo_15.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image