உயிருக்கு யார் பொறுப்பு? தடுத்து வைத்திருப்பதன் நீதி என்ன?

உயிருக்கு யார்  பொறுப்பு? தடுத்து வைத்திருப்பதன் நீதி என்ன?
நாங்கள் உயிரிழந்தால் அதற்கான பொறுப்பை ஏற்பது யார்? இங்கு எங்களை தடுத்து வைத்திருப்பதன் நீதி என்ன?
 
முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள்  தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்தநிலையில் நேற்று (12) காணொளி ஊடாக ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
கொத்தலாவல பல்கலைக்கழக புதிய தீர்மானத்திற்கு எதிராக, இலவச கல்விக்காக மக்கள் மாணவர்கள் ஒன்றிணைந்த போராட்டமொன்றை தான் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.  இதனூடாக ஒரு பக்கத்தில் கல்வி தனியார்மயப்படுத்தப்படுவது டன் மறுபக்கத்தில் இராணுவ பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு எதிராகவே எங்களுடைய போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.  இந்த  சட்டமூலம் ஊடாக பல்கலைக்கழக்த்தின் ஊடாக கிளைகளை உருவாக்கி  அதன் ஊடாக வழங்கப்படுகின்ற பட்டங்களைப் தனியார் துறைக்கு வழங்கி பணத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையே இடம்பெறப் போகிறது. மறுபுறத்தில் இராணுவமயமாக்கல் செயல்பாடும் இடம்பெறுகின்றது. 
 
இதற்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில்தான் எங்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி நீதிமன்றத்தில் எமக்கு கிடைத்த பின்னர் அங்கிருந்து எங்களை தனிமைப்படுத்துவதற்காக முல்லைத்தீவு விமானப்படை முகாமில் கொண்டுவந்து வைத்திருக்கின்றனர்.
 
இங்கு ஒரு பாரிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு நாங்கள் உயிரிழந்தால் அதற்கான பொறுப்பை ஏற்பது யார்?
 
நீதிமன்றம் என்றால் பிணையில் வெளியே விடுக்கப்பட்ட எங்களை பொலிஸாரினால் பலவந்தமாக இங்கே கொண்டுவந்து வைத்திருக்கும் போது எங்களுடைய பொறுப்பு யாரிடம் இருக்கின்றது? இது தான் எங்களது பிரச்சினையாக இருக்கின்றது. எந்த சட்டத்தின் கீழ் எங்களை வைத்திருக்கின்றார்கள்? இது தடுப்பு முகாம் இல்லை. தனிமைப்படுத்தல் நிலையம். எங்களை கொண்டு வந்து வைத்திருக்கின்றார்கள் இதற்கு யார் பொறுப்பு?
 
இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். எங்களுடைய வாழ்க்கைக்கு உறுதி வேண்டும்?  நாங்கள் மக்களிடம் கேட்கின்றோம் இது நீதியா? நீதிமன்றத்தினால்  விடுவிக்கப்பட்ட பின்னர் இங்கு கொண்டு வந்து எங்களை வைத்திருப்பது நீதியா? இராணுவ முகாமுக்குள் இருப்பது நீதியா?
இதில் இருக்கின்ற நீதி என்ன என்பதை அரசாங்கம் கூறவேண்டும். இது தவறான ஒரு நீதி. ஆகவே இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்று ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image