பேச்சுவார்த்தை தோல்வி - பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

பேச்சுவார்த்தை தோல்வி - பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது
நிறைவுகாண் மருத்துவர்கள் மற்றும் இடைநிலை மருத்துவப் பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
 
நிறைவுகாண் மருத்துவ தொழில வல்லுநர் ஒன்றியத்தினருடன் சுகாதார அமைச்சர் நேற்று நடைபெற்ற நடத்திய பேச்சுவார்த்தையின்போது, தங்களது கோரிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு உரிய தீர்மானத்தை மேற்கொள்ள தவறியமை காரணமாக போராட்டத்தை தொடர்ந்த முன்னெடுப்பதாக நிறைவுகாண் மருத்துவர்கள் மற்றும் இடைநிலை மருத்துவ பணியாளர்கள் தொழிற்சங்கம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
 
பிரதான பிரச்சினைகளுக்காக, சுகாதார அமைச்சர் குறைந்தது சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைப்பதற்கான இயலுமை இருக்கின்ற போதிலும், அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க ஒருவார காலம் கோரி இருக்கின்றமையானது, தீர்மானம் மேற்கொள்வதில் அவருக்கு அழுத்தங்கள் இருப்பதை தெளிவுபடுத்துகிறது.
 
எனவே இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீடு அவசியம் என்பதால், இதில் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோருவதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image